| 245 | : | _ _ |a இலந்தைக்குளம் செப்பேடு - |
| 300 | : | _ _ |a 29 செ.மீ நீளம், 19 செ.மீ. அகலம் |
| 500 | : | _ _ |a திருமலை நாயக்கர் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் நாச்சியாரை வணங்கச் சென்று கொண்டிருந்த வழியில் குலையப்பாறை பருவத தடாகம் என்ற இடத்தில் ஒரு பெண்ணும் அவளது குழந்தைகளும் தலைவிரிகோலமாக அழுது புலம்பிப் பெருத்த ஆரவாரம் செய்து கொண்டிருந்ததைக் கண்டு தனது இராச்சியத்தில் தனது விசயத்தின் போது ஏன் இப்படி ஒரு அவலம் என்று சினந்து அப்பகுதி வெள்ளிக்குறிச்சி பாளையக்காரர் சீரங்க நாயக்கரை அழைத்துக் காரணத்தை வினவினார். பாளையக்காரர் அப்பெண்ணிடம் காரணத்தை வினவ, அப்பெண்ணின் கணவன் புலியால் கொல்லப்பட்டான் என்பதை அறிந்து திருமலை மன்னரிடம் தெரிவிக்க, மன்னர் அப்புலியைக் கொள்வதற்கு ஆணையிட்டார். அப்புலியைக் கொல்ல மூவரையத் தேவன் என்னும் வீரன் முன்வந்தான். அவனும் அவனது உறவினர் ஆறுபேரும் சீரங்கநாயக்கனுடன் சென்று புலியைத் தேடிக் கொன்றார்கள். அவனுக்குத் “திருமலை மூவரையத்தேவன்“ என்று திருமலை நாயக்கர் பட்டமளிதார். வத்திராயிருப்பை ஒட்டிய கிராமத்தைத் தந்து செம்புப் பட்டயம் வழங்கினார். |
| 510 | : | _ _ |a திருமலை நாயக்கர் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 1 |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, இலந்தைக்குளம், திருமலை, நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், மூவரையத்தேவன், பாளையக்காரர், வெள்ளிக்குறிச்சி |
| 752 | : | _ _ |a இலந்தைக்குளம் |c இலந்தைக்குளம் |d விருதுநகர் |f வத்திராயிருப்பு |
| 905 | : | _ _ |a நாயக்கர் / திருமலை நாயக்கர் |
| 906 | : | _ _ |a 23.7.1654 |
| 914 | : | _ _ |a 9.4328527 |
| 915 | : | _ _ |a 77.492513 |
| 925 | : | _ _ |a 29 செ.மீ நீளம், 19 செ.மீ. அகலம் |
| 995 | : | _ _ |a TVA_CPS_00003 |
| barcode | : | TVA_CPS_00003 |
| book category | : | விசயநகரர், நாயக்கர் |
| cover | : |
|
| Primary File | : |